அனுரவுக்கு வாழ்த்து சொன்ன அமெரிக்கா: அத்துடன் இலங்கை விடுத்துள்ள முக்கிய செய்தி! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
அனுரவுக்கு வாழ்த்து சொன்ன அமெரிக்கா: அத்துடன் இலங்கை விடுத்துள்ள முக்கிய செய்தி!  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அமெரிக்கா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. புதிய இலங்கை ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து. செயல்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஜனநாயக அமைப்புகளின் வலிமைக்கான சான்று இந்த தேர்தல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைதியான முறையில் வாக்களித்த இலங்கை மக்களை பாராட்டுவதாகவும், நிலையான, செழிப்பான மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு அமெரிக்காவின் ஆதரவை விரிவுப்படுத்துவதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார். அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றின் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அமெரிக்கா விரும்புவதாக அறிக்கையில் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை