ஜனாதிபதி அநுர தலைமையில் பதவி பிரமாணம் - பாராளுமன்றம் கலைப்பு எப்போது? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
ஜனாதிபதி அநுர தலைமையில் பதவி பிரமாணம்  பாராளுமன்றம் கலைப்பு எப்போது?  லங்காசிறி நியூஸ்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் இந்த புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியின் (NPP) நான்கு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருப்பார்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெறுவார்கள். புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை, புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை தங்கள் பதவிகளில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி திஸாநாயக்க அமைச்சரவையை கூட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சு செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் இன்று (24) நள்ளிரவுக்குள் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனத் தெரியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     

மூலக்கதை