புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை - அமைச்சர்களுக்கு விழுந்த முதல் அடி (வீடியோ) - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் அனைத்தும் நேற்றிரவு காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டன. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதையடுத்து முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.