இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் - ரூ.11 பில்லியம் கோரும் தேர்தல் ஆணைக்குழு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்  ரூ.11 பில்லியம் கோரும் தேர்தல் ஆணைக்குழு  லங்காசிறி நியூஸ்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதனைத் தொடர்ந்து பொது தேர்தல் நடத்துவது தொடர்பிலும் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இலங்கையில் பொது தேர்தல் நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு திரைசேரிக்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.     

மூலக்கதை