டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடி

  தினத்தந்தி
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரோகித்  ஜெய்ஸ்வால் ஜோடி

கான்பூர், இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 52 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஹசன் மக்மூத் 4 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை செய்து அசத்தியுள்ளது.அதன் விவரம் பின்வருமாறு:-டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் 50+ ரன்களை குவித்த ஜோடி என்ற மாபெரும் சாதனையை ரோகித் - ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:-1. ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா - 14.34 (23 பந்துகளில் 55 ரன்கள்)2. ஸ்டோக்ஸ் - டக்கெட் - 11.86 (44 பந்துகளில் 87 ரன்கள்)3. வாக்னர் - பவுல்ட் - 11.55 (27 பந்துகளில் 52 ரன்கள்).

மூலக்கதை