2024 நாடாளுமன்ற தேர்தல்: செலவுகள் குறித்து ஜனாதிபதியின் இறுதி முடிவு - லங்காசிறி நியூஸ்
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு செலவாகும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிப்பதற்கான உரிய ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பிலான இரண்டு சந்திப்புகள் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்றன. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்களிப்புடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவும் கலந்துகொண்டார். இதற்கிடையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மேலும் ஆலோசிப்பதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு இடையே நேற்று பிற்பகல் மற்றொரு கூட்டம் நடைபெற்றது.