காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம்.. பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்

  தினத்தந்தி
காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம்.. பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்

அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்த பெண் இறந்திருப்பதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் நவ்சாரி நகரில் கடந்த 23-ம் தேதி நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு அந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளனர். இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது:-நவ்சாரி ஓட்டலில் அறை எடுத்து காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருக்கிறது. ஆனால், அவரது காதலனோ, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முயற்சி செய்யாமல், ஆன்லைனில் வழிமுறைகளை தேடி நேரம் கடத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்தப்போக்கு அதீதமாகி அந்த பெண் மயங்கியிருக்கிறார். இதனால் பயந்துபோன காதலன், தனது நண்பர் ஒருவரை ஓட்டலுக்கு வரவழைத்து அவர் உதவியுடன் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உடல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில், உடலுறவுக்கு பிறகு அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காதலன் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காதலனை அக்டோபர் 4-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை