இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு புடின் அனுப்பியுள்ள செய்தி - ரஷ்ய தூதுவருடன் அனுரவின் சந்திப்பு! - லங்காசிறி நியூஸ்
இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய தேர்தல் குறித்து தூதுவர் Dzhagaryan தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுள்ளார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடமிருந்து தனிப்பட்ட செய்தியையும் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஆழமடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி புடின் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். அதே நேரத்தில் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக தூதரக உறவுகளை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் இருதரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.