பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி

  தமிழ் முரசு
பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவியை விவாகரத்து செய்வதில் தமக்கு விருப்பமில்லை என்றும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நீதி நிலைநிறுத்தப்படும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார். “மணமுறிவு குறித்து நாங்கள் இருவரும் இணைந்து முடிவு எடுத்ததாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இது என் கணவர் எடுத்த தனிப்பட்ட முடிவு. இந்த முடிவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. “தனிப்பட்ட முறையில் அவருடன் பேச நான் தயாராக இருந்தும், இப்போது வரை அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. “திருமண பந்தத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இது குறித்து பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. “என் குடும்ப நலனே எனக்கு முக்கியம். கடவுள் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று ஆர்த்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவி அண்மையில் அளித்த விரிவான பேட்டியை அடுத்து, ஆர்த்தியின் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.உண்மையை மறைக்க என்னைப் பற்றி மிக மோசமாக சித்திரிக்க சில தரப்பினர் முயற்சி செய்வதாகவும் ஆனால் தாம் இதுவரை மிகுந்த கண்ணியம் காத்து வருவதாகவும் ஆர்த்தி கூறியுள்ளார்.

மூலக்கதை