மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை சரிவு

  தினத்தந்தி
மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை சரிவு

மும்பை,மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. கடந்த வாரம் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் முதல் 2 நாட்கள் வீழ்ச்சியை தொடர்ந்து இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி, நிப்டி 418 புள்ளிகள் சரிந்து 25,378 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல பேங்க் நிப்டி 786.95 புள்ளிகள் குறைந்து 52.137.70 என்ற புள்ளிகளில் உள்ளது. சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிந்து 82,550.12 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல பின் நிப்டி, பேங்க் எக்ஸ், மிட்கே ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. நிப்டி பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோல வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாக தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின. கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை