மனிதர்களின் செயலால் பலியாகியுள்ள 277 காட்டு யானைகள் - வெளியான அறிக்கை! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
மனிதர்களின் செயலால் பலியாகியுள்ள 277 காட்டு யானைகள்  வெளியான அறிக்கை!  லங்காசிறி நியூஸ்

இந்த ஆண்டு ஒக்டோபர் வரை மொத்தம் 277 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு 488 யானைகள் கொல்லப்பட்டன.திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, யானைகள் உயிரிழப்பதற்கு, விவசாயிகள் பயிர்களைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது.திணைக்களம் தனிப்பட்ட மின்சார வேலிகளை ஆராய்ந்து சட்டவிரோதமானவற்றை அகற்ற முடிவு செய்துள்ளது.சட்டப்பூர்வமாக மின் வேலிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. சட்டப்பூர்வ மின்சார வேலிகள் கூட சரியான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 70 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 35 ஆக குறைந்துள்ளது. யானை இறப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டுவதற்காக திணைக்களம் முன்னெச்சரிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை