'வேட்டையன்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

  தினத்தந்தி
வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

சென்னை,நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் இந்தியா, அமெரிக்கா, அமீரகம் உள்பட உலகம் முழுவதும் நாளை வௌியாகிறது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.'வேட்டையன்' திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.இந்நிலையில், 'வேட்டையன்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

மூலக்கதை