அமெரிக்காவில் 'வேட்டையன்' கொண்டாட்டம் - வீடியோ வைரல்

  தினத்தந்தி
அமெரிக்காவில் வேட்டையன் கொண்டாட்டம்  வீடியோ வைரல்

சென்னை,நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் இந்தியா, அமெரிக்கா, அமீரகம் உள்பட உலகம் முழுவதும் நாளை வௌியாகிறது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.'வேட்டையன்' திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'வேட்டையன்' படத்தை வரவேற்று ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது.இதில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றிருந்தன. மேலும், 'வேட்டையன்' பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த வருண், தயாரிப்பாளர் பாபி பாலசந்தர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்தான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.Thalaivar fans in Dallas are lighting up the city with excitement! The countdown for VETTAIYAN ️ has begun, and the celebrations are in full swing! #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/DMHFkLeRAW

மூலக்கதை