இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெல்லிங்டன்,இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது. இந்த தொடரும் இந்தியாவில் நடக்கிறது.இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டாம் லதாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணி விவரம்: டாம் லதாம் (கேப்டன்), டாம் ப்ளெண்டல் (விக்கெட் கீப்பர்), மார்க் சாம்ப்மென், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், பென் சீயர்ஸ், டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட்க்கு மட்டும்), இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட்க்கு மட்டும்). போட்டி அட்டவணை விவரம்:முதல் டெஸ்ட் போட்டி - பெங்களூரு - அக்டோபர் 16-202வது டெஸ்ட் போட்டி - புனே - அக்டோபர் 24-283வது டெஸ்ட் போட்டி - மும்பை - நவம்பர் 1-5ICYMI | Our Test squad for the upcoming three-Test series against India, starting in Bengaluru next Wednesday. Watch all matches LIVE on @skysportnz #INDvNZ #CricketNation pic.twitter.com/TzvMIpZSrH