ரெப்போ வட்டி விகிதத்தில் 10வது முறை மாற்றமில்லை

  தமிழ் முரசு
ரெப்போ வட்டி விகிதத்தில் 10வது முறை மாற்றமில்லை

புதுடெல்லி: வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் தற்போதைய வட்டி விகிதம் 6.5 விழுக்காடு என்பது தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை (அக்டோபர் 9) மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “2023 பிப்ரவரி முதல் பத்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. “அது 6.5 விழுக்காடாகவே நீடிக்கிறது. அதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது,” என்றார்.மேலும் அவர் கூறும்போது, “பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. “பணவீக்க விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.5 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும். இந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. “2012-13 நிதி ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டின் பங்கு அதிகரித்து வருகிறது. 2025-26 நிதி ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3 விழுக்காடாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.

மூலக்கதை