தக்காளி விலையேற்றம்; வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

  தமிழ் முரசு
தக்காளி விலையேற்றம்; வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

ஆந்திர மாநிலத்தில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதையடுத்து, கொள்ளைக்காரர்கள் தக்காளி வியாபாரிகள், விவசாயிகளைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.தக்காளி வியாபாரியான கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நயாஸ். இவர் ஐதராபாத் சந்தையில் தக்காளியை விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, கொள்ளைக் கும்பல் அவரது வேனை 250 கிலோமீட்டர் தூரம் காரில் விரட்டிச் சென்று வழிமறித்துள்ளனர்.அவரிடம் இருந்த கைப்பேசி, ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து பணம் பறித்துச் சென்ற கும்பலைத் தேடி வருகின்றது.

மூலக்கதை