டி20 கிரிக்கெட் தரவரிசை; ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஏற்றம் கண்ட ஹர்திக் பாண்ட்யா
துபாய்,இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (216 புள்ளி) 4 இடங்கள் ஏற்றம் கண்டு 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டன் (253 புள்ளி) முதல் இடத்திலும், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி (235 புள்ளி) 2ம் இடத்திலும் உள்ளனர். டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (881 புள்ளி) முதல் இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (807 புள்ளி) 2ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (800 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.டி20 கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் (721 புள்ளி) முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அஹெல் ஹொசைன் (695 புள்ளி) 2ம் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (668 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர். வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் (642 புள்ளி) 8 இடங்கள் உயர்ந்து தரவரிசை பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.A host of India's stars have made leaps in the latest Men's T20I Player Rankings More https://t.co/My0WeNXuMb