இந்தியாவில் நீரிழிவு அதிகரிக்க சமோசா, சிப்ஸ் காரணம்: இந்திய மருத்துவ ஆய்வு மன்றம்

  தமிழ் முரசு
இந்தியாவில் நீரிழிவு அதிகரிக்க சமோசா, சிப்ஸ் காரணம்: இந்திய மருத்துவ ஆய்வு மன்றம்

இந்தியாவில் நீரிழிவு நோய் ஒரு பெரிய பொதுச் சுகாதார சவாலாகத் தொடர்கிறது. மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றமும் இணைந்து 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கிட்டத்தட்ட 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.மேலும், 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகளில் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுக்கு முன்னர், இந்தியாவில் நீரிழிவு நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாக இருந்தது என உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.உலகின் நீரிழிவு நோய்க்கானத் தலைநகரமாக இந்தியா இருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கேக் போன்ற பேக்கரி உணவுகள், சிப்ஸ், சமோசா போன்ற வறுத்த உணவுகளையும் மயோனீஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் உண்பதே காரணம் என அண்மையில் வெளியான ஆய்வு கூறுகிறது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டன.

மூலக்கதை