பிரித்தானியா குட்டி இளவரசிக்கு போட்டியாக இத்தாலி இளவரசி: கொண்டாடும் மக்கள்

  NEWSONEWS
பிரித்தானியா குட்டி இளவரசிக்கு போட்டியாக இத்தாலி இளவரசி: கொண்டாடும் மக்கள்

ஆனால் இத்தாலியர்களோ லிபியாபில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த, கப்பலில் பிறந்த பெண் குழந்தையை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை பெட்டிக்கா என்ற கப்பல் 654 பயணிகளுடன் இத்தாலிக்கு வந்துகொண்டு இருந்தது.

அப்போது கப்பலிலேயே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. மீட்புப்படையினர் அக்குழந்தையை உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் குழந்தை மீட்கப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு ஃப்ரான்சிஸ்கா மெரினா (மெரினா என்றால் கடற்படைஎன பொருள்) என பெயர் வைத்துள்ளனர்.

மேலும் இத்தாலிய கடற்படையினர் அந்த குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். மேலும் அந்த குழந்தையை இத்தாலியின் இளவரசி என அந்நாட்டு பத்திரிகைகள் கொண்டாடிவருகின்றன.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகவியலாளர் கிராமெலினி கூறுகையில், ஃப்ரான்சிஸ்காவுக்கு தங்கள் நாட்டை சேர்ந்த ஏராளமான மக்களின் ஆசிர்வாதம் இருப்பதாகவும், எனினும் தங்கள் நாட்டின் சட்டப்படி அவள் 18 வயதுக்கு மேல் தான் இத்தாலியின் பிரஜையாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை