இத்தாலி நாட்டில் நாய்கள் குரைத்தால் உரிமையாளருக்கு அபராதம்: அதிரடி உத்தரவிட்ட அரசு

  NEWSONEWS
இத்தாலி நாட்டில் நாய்கள் குரைத்தால் உரிமையாளருக்கு அபராதம்: அதிரடி உத்தரவிட்ட அரசு

தெற்கு இத்தாலியின் Campania மாகாணத்தில் Controne என்ற நகர் உள்ளது. இந்நகருக்கு Nicola Pastore என்பவர் மேயராக பணியாற்றி வருகிறார்.

இத்தாலிய மக்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்ட பின்னர் சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவது என்பதை ஒரு முக்கிய பழக்கமாகவே பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் அந்நகர் முழுவதும் செல்ல நாய்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்பகுதி மக்கள் மதிய உணவு எடுத்துக்கொண்ட பின்னர், குட்டி தூக்கம் போடும்போது நாய்கள் குரைப்பதால் அவர்களின் தூக்கம் பறிபோகிறது என மேயருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மேயர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், Controne நகருக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடிமக்களின் மதிய தூக்கத்தை நாய்கள் தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது.

இனிமேல், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நாய்கள் குரைக்காமல் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாய்கள் குரைத்து நிரூபிக்கப்பட்டால், அவற்றின் உரிமையாளருக்கு 20 முதல் 500 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.

பிற்பகல் வேளை மட்டுமின்றி, இரவு நேரங்களில் கூட நாய்களை குரைக்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என மேயர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை