இளம் வயது அகதிகளை இத்தாலியில் விபச்சாரத்திற்கு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு: சர்ச்சையை கிளப்பிய தொண்டு நிறுவனம்

  NEWSONEWS
இளம் வயது அகதிகளை இத்தாலியில் விபச்சாரத்திற்கு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு: சர்ச்சையை கிளப்பிய தொண்டு நிறுவனம்

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இத்தாலிய தொண்டு நிறுவனம் ஒன்று, பெரும்பாலான பெண்கள் மற்றும் இளம் வயது அகதிகளை தெருவீதியில் பணிக்கு அனுப்புவதாகவும் ஊதியமாக 250 யூரோ மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற காரணங்களால் நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து நைஜர், லிபியா வழியாக மத்திய தரைக்கடல் கடந்து பெரும்பாலும் இளைஞர்களே வருவதாக கூறும் அந்த தொண்டு நிறுவனம்,

இவர்களே அதிகமாக ஏமாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மொடல்கள் போன்று சிறப்பன தொழில்களில் அமர்த்தப்படுவதாக வாக்குறுதியளித்து அழைத்து வரப்படும் இதுபோன்ற இளம் பெண்களை,

கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அனுப்பி வருவாய் பார்க்கும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்களது கட்டுப்பாட்டில் இருக்க மறுக்கும் அகதிகளை கடுமையாக தாக்கப்படுவதாகவும், அச்சுறுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பலை இத்தாலி பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை