19 வயது மாணவியை சிறுநீர் கழிக்க விடாமல் தண்டித்த ஆசிரியர்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்
இத்தாலியில் உள்ள பலேர்மோ என்ற பல்கலைகழக 19 வயது மாணவி பயின்று வந்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் முறைகேடாக தேர்வுகள் எழுதப்பட்டதாக அண்மப்யில் புகார்கள் எழுந்ததால், தேர்வு எழுதும் நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்வுகள் தொடங்கிய நிலையில் வகுப்பிற்கு நுழந்தை மாணவர்கள் தேர்வு முடிந்த பிறகு ஒவ்வொருவராக மட்டுமே வெளியே அனுப்பபடுவார்கள் என ஆசிரியர்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
இதே வகுப்பில் 19 வயதுடைய மாணவி ஒருவரும் தேர்வு எழுத சென்றுள்ளார். இந்த மாணவியின் சிறுநீர் கழிக்கும் பாதையில் நோய் தொற்று இருந்துள்ளதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாக இருந்துள்ளது.
இந்நிலையில், 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை எழுதி முடித்த அந்த மாணவி தான் வெளியே செல்ல வேண்டும் என ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
ஆனால், 2 மணி வரை யாரையும் வெளியே அனுப்ப முடியாது எனக்கூறிய அந்த ஆசிரியர் மாணவியை இருக்கையில் அமர்ந்துருக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மாணவியுடன் இருந்த அவரது மூத்த சகோதரி ஆசிரியரிடம் தனது தங்கையின் நோய் குறித்து எடுத்து கூறியுள்ளார்.
ஆனால், இதனை அறிந்த பின்னரும் அந்த ஆசிரியர் மாணவியை கழிவறைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், வகுப்பை விட்டு வெளியே சென்றால், மாணவி எழுதிய தேர்வை ரத்து செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால், மருத்துவர் ஆவது தனது கணவு என்பதால், அந்த மாணவி பொறுத்துக்கொண்டு அழுகையுடன் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
சுமார் 40 நிமிடங்கள் கழித்து அந்த ஆசிரியர் மாணவியை கழிவறை செல்ல அனுமதித்துள்ளார்.
கழிவறை நோக்கி ஓடிய அந்த சிறுமி, கழிவறை கதவு அருகே ரத்தப்போக்கு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு அனுமதித்தார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய மாணவி தேர்வுக்கு முன்னர் ஆசிரியரிடம் கொடுத்து வைத்திருந்த அப்பிள் மொபைல் போனை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
ஆனால், அதுபோன்ற கைப்பேசியை யாரும் தரவில்லை என கூறி அந்த மாணவியை ஆசிரியர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
மாணவியை அவமதிக்கும் விதத்திலும், அவருக்கு உடல் ரீதியாக ஆபத்து விளைவிக்கும் விதமாக நடந்துக்கொண்ட ஆசிரியர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.