17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல் (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே பேச தொடங்கி பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக 14 வயதிலேயே இவனுக்கு பல்கலைக்கழகத்தின் சேர்வதற்கு இடம் கிடைத்தது, எனினும் பள்ளி படிப்பை படிக்க வேண்டும் என்று அவர் அதை நிராகரித்தார்
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஷம்மிங் லியாங் (Xuming Liang) என்பவரும் இவனும் இணையம் மூலமான ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாயினர்.
இருவரும் கணிதம் பற்றியே எப்போதும் விவாதித்துக்கொண்டனர். இதன் விளைவாக தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிதாக ஒரு கணித தியரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
லியாங்- ஜெலிச் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தியரம் மூலம் கணக்கிடும் போது கணணியை விட வேகமாக விடை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவனின் திறமையை விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
தற்போது 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் இவனிடன், நீங்கள் உங்களை மேதையாக உணர்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நிச்சயமாக இல்லை. நான் இன்னும் திறமையை வளர்த்துகொள்ள வேண்டிய பகுதிகள் என் வாழ்வில் ஏராளமாக உள்ளன என்று பதிலளித்துள்ளார்.