அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்! பயணிகள் செல்ல அச்சம்

  NEWSONEWS
அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்! பயணிகள் செல்ல அச்சம்

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 60 சுறாக்கள் Windang கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுறாக்களில் பெரும்பாலானவை Hammer Heads Whale. இவைகளின் அளவு 2.5 மீட்டரிலிருந்து 3.5 மீட்டர் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று Jervis Bay-லும் 30 சுறாக்கள் மேற்பரப்பில் காணப்படுகிறது. இவைகள் Bronze Whales-ஆக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

Kembla துறைமுக பகுதியில் உலா சென்றவர் ஒரு சுறாவை பார்த்ததாக கூறியதால், ரோந்து படையினர் வான்வழியாக சென்று பார்த்தபோது, அது உண்மைதான் என்றும் அந்த சுறாவின் அருகில் மேலும் ஐந்து Hammer Heads சுறாக்கள் காணப்படுவதாகவும் தகவல் அளித்தனர். இதுமட்டுமின்றி Warilla என்ற பகுதியிலும் சுறாக்கள் காணப்படுகின்றன.

இப்படி பல பகுதியிலும் சுறாக்கள் கரைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன. சுறாக்கள் கரைபகுதியில் இறங்கியுள்ள நிலையில் மக்களும் இறங்கி சுறாவுக்கு பலியான சம்பவங்கள், அவுஸ்திரேலியாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகமாகவே நடந்துள்ளது.

ஆழமும் அலைகளும் குறைந்த இந்த பகுதியில்தான் அங்குள்ள மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நீச்சல் மற்றும் மிதவை கருவிகளில் பொழுதுபோக்காக விளையாடுவார்கள். ஆளையே கொல்லும் இந்த அபாய சுறாக்கள் முதலைக்கும் மேலானது.

மக்களின் மகிழ்ச்சி கடலானது துன்ப கடல் ஆவதை தவிர்க்கவே, கரைகடல் கடந்து ஆழ்கடல் பகுதிக்கு சுறாக்கள்செல்லும் வரை, மக்கள் கடலுக்குள் இறங்காதிருக்கும் வண்ணம் தடுப்பு நடவடிக்கையை கடற்கரை பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை