மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்

  NEWSONEWS
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்

காலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.

மக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.

69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

மூலக்கதை