பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது
இது குறித்த விவரம்:
1995-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக நான்கு டன் ஆயுதங்களை பாராசூட்டில் நீல்ஸ் அனுப்பி வைத்தார். அவர்களுடன் ரஷியர் ஒருவரும், பிரிட்டனைச் சேர்ந்தவரும் அந்த பாராசூட்டில் வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நீல்ஸ், டென்மார்க்கில் இருப்பது கடந்த 2001-ம் ஆண்டே தெரியவந்தது. ஆனால், வெளிநாட்டு குற்றவாளியை இந்தியா கொண்டுவருவதற்கு எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இந்த காலதாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் நீல்ஸ் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.