பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன்
ஜான் கெர்ரி, ரிச்சர்ட் லூகர் ஜோ லைபெர்மென் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பான்-கி-மூன், �பருவநிலை மாற்றப் பிரச்சனையைத் தீர்ப்பதில் பிற நாடுகளை விட அமெரிக்கா முக்கியமானதாகத் திகழ்கிறது� என்றார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் பருவநிலை தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட உள்ள உடன்படிக்கைக்கு அடித்தளமாகத் திகழ வேண்டும். அந்த வகையில், உலகின் அனைத்து தரப்பினரும் அமெரிக்கா மற்றும் அதன் நாடாளுமன்ற குழுவின் மீது கவனம் செலுத்துகின்றனர் என பான்-கி-மூன் கூறியுள்ளார்.