சீறிப்பாய்ந்து வந்த திகிலூட்டும் அலை: முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்! (வீடியோ இணைப்பு)

  NEWSONEWS
சீறிப்பாய்ந்து வந்த திகிலூட்டும் அலை: முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்! (வீடியோ இணைப்பு)

சிட்னியின் ராயல் தேசிய பூங்காவில் (Sydney's Royal National Park) உள்ள கடற்கரையை பார்வையிடுவதற்காக பர்வையாளர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் இருப்பார்கள்.

இந்நிலையில், நேற்று இந்த கடற்கரை ஓரம் மக்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திகிலூட்டும் அலை ஒன்று ஆக்ரோஷமாக எழுந்து வந்துள்ளது.

இதனை எதிர்பார்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த, சுமார் 100 பேர் அந்த அலையில் மூழ்கடிக்கப்பட்டு திணறியுள்ளனர்.

இதில் ஒரு நிகழ்வாக ஒரு ஜோடியினர், கடலில் விளையாடிக்கொண்டே முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போது, இவர்களின் பின்னால் எழுந்து வந்த அலை அவர்களையும் மூழ்கடித்தது.

இவர்கள் இருவரும் கட்டியணைத்துக்கொண்டு இருப்பது, இவர்களின் பின்னால் அலை சீறிப்பாய்ந்து வருவது போன்ற காட்சிகள் மற்றும் அலையில் மக்கள் மூழ்கடிக்கப்படுவது போன்றவற்றை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த அலையினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு மீட்பு ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 22 வயது பெண்ணின் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் 53 வயது பெண்மணி ஒருவரின் கணுக்கால் உடைந்து அவதிக்குள்ளாகியுள்ளார்.

மேலும் 20 வயது பெண் ஒருவரும் பாதிப்படைந்துள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட 3 பெண்களும் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இக்கடற்கரைக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் நடப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை