SPM தேர்வு முடிவுகள்: ஜொகூரில் 1204 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ பெற்றனர்
ஜொகூர், 3 மார்ச்- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 52,512 மாணவர்களில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 1099 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4.49 விழுக்காட்டினர், அதாவது 27 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்ற வேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 54 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சராசரி மதிப்பீட்டுப் புள்ளி 5.06-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.06 குறைவாகும்.