சித்தியவானைச் சேர்ந்த யுகேந்திரன் அனைத்துப் பாடங்களிலும் 10 ஏ தேர்ச்சி
சித்தியவான், மார்ச் 3- சித்தியவான், ஏ.சி.எஸ் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் யுகேந்திரன் த/பெ ஜெகதீசன் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
எஸ்.பி.எம் தேர்வில் மொத்தம் 10 பாடங்கள் எடுத்த மாணவர் யுகேந்திரன், 9 ஏ+ மற்றும் 1 ஏ பெற்று பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.