லகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்
கோலாலம்பூர், 4 மார்ச்- லகாட் டத்துவில் இன்று காலை 8.43 மணியளவில், ரிக்டர் கருவியில் 3.5-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.
அதற்கு முன்னதாக சபா, செம்போர்ணாவில் அதிகாலை 5.47 மணியளவில் ரிக்டர் கருவியில் 5.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது.
இந்த நிலநடுக்கம் பப்புவா நியு கினியில், பிஸ்மார்க் கடலில் மையமிட்டிருந்தது.
எனினும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.