டத்தோஶ்ரீ நஜீப்பை நீக்க வேண்டும்! துன் மகாதீர் தலைமையில் பிரகடனம்.

  வணக்கம் மலேசியா
டத்தோஶ்ரீ நஜீப்பை நீக்க வேண்டும்! துன் மகாதீர் தலைமையில் பிரகடனம்.

கோலாலம்பூர், மார்ச்-4

பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு எதிரான பிரஜைகளின் பிரகடனம் என்ற இணக்க உடன்பாட்டில் முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையில் செல்வாக்குமிக்க 57 மலேசிய அரசியல் சமூகப் பிரமுகர்கள் கையெழுத்திட்டனர்.

அந்தப் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மேற்கண்ட அம்சங்களை அந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.

 

மேற்கண்ட கோரிக்கைகளுக்கான பல்வேறு முக்கியக் காரணங்களில் சிலவற்றைக் கீழேகாண்போம்.

1-   நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகச் சூழ்நிலை ஆகிய மோசமடைந்து வருவதால் கவலை ஏற்பட்டுள்ளது.

2-   டத்தோஶ்ரீ நஜிப்பின் தலைமையின் கீழ் நாட்டுக்கு பல பாதங்கள் ஏற்பட்டுள்ளன.

3-   2013ஆம் ஆண்டுக்கான ஏர்னஸ்ட், அண்ட் யெங் அமைப்பு தனது ஆசிய பசிபிக் அறிக்கையில் உலகிலேயே ஊழல் மிகுந்த 10 முன்னணி நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனக் கூறியுள்ளது.

 

பலகலைக் கழகங்கள் உட்பட அனைத்து அமைச்சுகளுக்கும் பொது நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்நிதிப் பற்றாக்குறையே. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் பணம் இல்லை என்கிற நிலை.

மேற்கண்டவாறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் துன் மகாதீரினால் வாசிக்கப்பட்ட அந்தப் பிரகடனத்தில் 1 எம்டிபி நிறுவன விவகாரம் பற்றியும், நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 260 ரிங்கிட் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

 

1எம்.பி.டி.பிக்கு சொந்தமான பெரும் பண இழப்புக் குறித்து பத்து கவான் அம்னோ டிவிஷன் துணைத் தலைவர் போலீசில் புகார் செய்தார். ஆனால், இதுபற்றி விசாரிக்காமல், போலீஸ் புகார் செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, செய்து சொஸ்மா எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் என்று பிரகடனம் குறிப்பிட்டது.

மூலக்கதை