அவுஸ்திரேலியாவில் முன் கூட்டியே பாராளுமன்றத் தேர்தல்
முன்னாள் பிரதமர் டோனி அபாட்டுக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக கடந்த ஆண்டு மால்கம் டர்ன்பல் பதவிக்கு வாந்தார்.
‘கன்சர்வேடிவ் லிபரல் தேசிய கூட்டணி’ சார்பில் பிரதமராக இருக்கும் அவருக்கு பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை இரூகும் நிலையில், வரும் யூலை மாதம் 2ம் திகதி பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மால்கம் டர்ன்பல், அரசியல் நாடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் நேரம் இது.
மேலும், செனட் சபையில் முட்டுக்கட்டைக்கு பதிலாக சட்டம் இயற்றுவதற்கு இது ஒரு சரியான வாய்ப்பு என பேசியுள்ளார்.