சிரிய அகதிகளின் மனிதாபிமானம்!

  NEWSONEWS
சிரிய அகதிகளின் மனிதாபிமானம்!

ஜேர்மனியின் இடது சாரி கட்சியான NPD - யின் முன்னணி வேட்பாளராக இருக்கும் Stefan Jagsch என்பவர், காலை 9.00 மணியளவில் büdingen நகருக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது, காரினை ஓட்டிச்சென்ற ஓட்டுநர், ரோட்டின் பக்கவாட்டில் உள்ள மரத்தின் மீது காரினை மோதியதில், அதில் இருந்த Stefan தீவிர காயமடைந்தார்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தினை கடந்து அகதிகள் சென்றுகொண்டிருந்துள்ளனர், கார் நிலைகுலைந்து இருப்பதை பார்த்த இரண்டு அகதிகள், விரைந்து வந்த, Stefan க்கு முதலுதவி அளித்தனர், அதன் பின்னர் அவசரஊர்தி வரும்வரை, காத்திருந்து அவரை கவனமாக பார்த்துக்கொண்ட அகதிகள், பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தில் தீவிரகாயமடைந்த Stefan - க்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இக்கட்சியின் தலைவரான Jean Christoph Fiedler, இரண்டு அகதிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, புகலிடக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு உதவி செய்வார்க என்று எதிர்பார்க்கவில்லை.

நல்ல மனிதாபிமானத்தோடு செல்பட்ட அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

மூலக்கதை