ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்

  NEWSONEWS
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்

மேற்கு ஜேர்மனியில் உள்ள Bielefeld என்ற நகரில் Tarik S என பெயருடைய 22 வயதான வாலிபர் ஒருவர் படித்து விட்டு வேலையின்றி சுற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

ஒரு முறை கெய்ரோவில் நடைபெற்ற தாக்குதலில் இவருக்கு குண்டு காயம் ஏற்பட அங்கிருந்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.

பின்னர், இதே ஆண்டில் தீவிரவாதிகளால் மூளை சலைவை செய்யப்பட்ட இந்த வாலிபர் இங்கிருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிரியாவுக்கு சென்ற 3 வாரங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் வீடியோக்களில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில், சிரியாவிலிருந்து அந்த நபர் தாய்நாடான ஜேர்மனிக்கு திரும்புவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் கடந்த புதன்கிழமை அன்று Frankfurt விமான நிலையத்தில் பொலிசாரை குவித்துள்ளனர்.

பொலிசார் எதிர்பார்த்தது போலவே நபர் விமான நிலையத்தில் இறங்கியதும் பொலிசார் விரித்திருந்த வலையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

நபர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள பொலிசார் அவரை Karlsruhe நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.

மூலக்கதை