அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க சம்பள அறிவிப்பை வெளியிட்ட கலிபோர்னியா
அமெரிக்காவில் நாடு முழுவதும் வேலை செய்யும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பிவருகின்றன.
எனவே, அமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் உள்ள பிரபல நிறுவனங்கள் சில மட்டும் சம்பளத்தை ஓரளவுக்கு உயர்த்தியுள்ளன.
அதாவது ஒருமணி நேரத்துக்கு பத்து முதல் பன்னிரெண்டு டொலர்கள்வரை அளித்து வருகின்றன.
இந்நிலையில், கலிபோர்னியா மாநில கவர்னரின் ஏற்பாட்டில் இன்னும் ஆறாண்டுகள் கழித்து, வரும் 2023-ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் குறித்து நிர்ணியிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளன.
எனவே, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்களின் குறைந்தபட்ச புதிய சம்பளமாக ஒருமணி நேரத்துக்கு 15 டொலர்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன், வரலாற்று சிறப்புமிக்க இந்த சம்பள உயர்வை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.