வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளர்: அதிரடியாக அபராதம் விதித்த நீதிமன்றம்

  NEWSONEWS
வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளர்: அதிரடியாக அபராதம் விதித்த நீதிமன்றம்

ஜேர்மனியில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள முடியாது. ஆனால், அவர்களின் அடிப்படை உரிமைகளை காக்க சட்டங்கள் உள்ளன.

கலோன் நகரை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சொகுசான வீட்டை புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஓரினச்சேர்க்கை தம்பதியான இரு ஆண்கள் அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர்.

இருவரும் ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதி என்பதால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட உரிமையாளர் மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த தம்பதி ‘தங்களுக்கு எதிராக பாலியல் பாகுபாடு பார்க்கப்படுவதாக’ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை நபர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள தான் தடை உள்ளதே தவிர அவர்களது அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு அல்ல.

எனவே, வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளருக்கு 1,700 யூரோ அபாரதம் விதிப்பதாக உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மூலக்கதை