அகதிகளுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க ஜேர்மனி முடிவு: காரணம் என்ன?
கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனியை சேர்ந்த AIDS Hilfe (DAH) என்ற அமைப்பு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
இதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய பாலியல் தாக்குதல் இந்த கோரிக்கையை பலப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை சேந்த 4 ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த 4 நிறுவனங்களும் சுமார் 1,50,000 ஆணுறைகளை தயாரித்துள்ளதாகவும், இவற்றை நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு இலவசமாக விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் தங்களுடைய பாலியல் விருப்பங்களை எந்தவித பின் விளைவுகள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக இந்த ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
அதே சமயம், அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் ஐரோப்பாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-ல் 4 பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என்பதற்காகவும் இந்த ஆணுறைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.