கனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)
மனிடோபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் டோம் மார்ட்டின்ஸ் மற்றும் டெஸ்டினி டர்னர் என்ற தம்பதி தங்களது சேஸ் மார்ட்டின்ஸ் என்ற 2 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது சேஸ் திடீரென காணாமல் போயுள்ளான்.
மகனை காணாமல் தவித்த பெற்றோர் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்ற பொலிசார் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வ நபர்களை திரட்டிக்கொண்டு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குழந்தை காணாமல் போய் தற்போது 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பெற்றோர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘எங்களுடை குழந்தையை காணாமல் மரண வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கிறோம்.
குழந்தையை யார் வைத்திருந்தாலும் கூட, அச்சப்பட வேண்டாம். உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. தயவுசெய்து உடனடியாக குழந்தையை ஒப்படைத்து விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குழந்தை குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.