ஓரின சேர்க்கையாளருக்கு அகதியாக வசிக்க அனுமதியளித்தது கனடா

  NEWSONEWS
ஓரின சேர்க்கையாளருக்கு அகதியாக வசிக்க அனுமதியளித்தது கனடா

மலேசியாவை சேர்ந்தவர் ஹாசிம் இஸ்மாயில். இவர் கனடாவின் Winnipeg பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

ஹாசிமுக்கு ஓரின சேர்க்கையில் நாட்டம் அதிகம். மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது குற்றம் என்பதால் மலேசியா திரும்பினால் தனக்கு தண்டனை கிடைக்கும் என அவர் பயந்தார்.

மேலும், மலேசியாவை சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு கொலை மிரட்டலும் விதித்தனர்.

இதற்கிடையில் ஹாசிம் ஓரின சேர்க்கையாளர் என்ற விடயம் தெரிந்ததால் பெற்றோரும் அவரை கைவிட்டுவிட்டனர்.

இதையடுத்து கனடாவிலேயே அகதியாக வசிக்க தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என அவர் விண்ணப்பித்திருந்தார்.

ஹாசிமின் விண்ணப்பத்தை பரிசீலித்த குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் கனடாவில் அகதியாக வசிக்க அவருக்கு அனுமதியளித்துள்ளது.

மூலக்கதை