தங்கவிழா, வெள்ளிவிழா, வைரவிழாக்களை சந்தித்த ராணி எலிசபெத் (வீடியோ இணைப்பு)

90 வயதை அடைந்திருக்கும் அவரது முழுப்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி.
தந்தை ஆறாம் ஜார்ஜுக்கும் தாய் எலிசபெத் போவெஸ் லியோனுக்கும் மகளாக 1926, ஏப்ரல் 21 ம் திகதி லண்டனில் பிறந்தார்.
இளமையில் வீட்டிலேயே வரலாறு, மொழி, இலக்கியம், இசை உட்பட்ட கல்வியை தாயார் மற்றும் கவர்னரின் மேற்பார்வையில் பயின்றார்.
எலிசபெத் இளமையிலேயே துணை பிராந்திய சேவைகளிலும் இரண்டாம் உலகப்போரின் போதும் பொதுக்கடைமைகளிலும் ஈடுபட்டார். அவருடைய அண்ணன் எட்டாம் எட்வர்ட் அரியணை ஆசையை துறந்ததால் அடுத்த வாரிசாக எலிசபெத் கணிக்கப்பட்டார்.
இவருக்கு சேவை பணி வாகனங்களின் ஓட்டுனர் மற்றும் மெக்கானிக் வேலைகள் முதல் பயிற்சியாக அளிக்கப்பட்டது. இவர் பக்கிங்காம் அரண்மனை நிறுவனத்தில் பெண்களுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டார்.
தொடர்ந்து 1947ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி எடின்பெர்க் பிரபுவான பிலிப்ஸ் மவுன்ட்பேட்டனை திருமணம் செய்துகொண்டார்.
எலிசபெத், பிலிப்ஸ் தம்பதிகளுக்கு இளவரசர் சார்லஸ், இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
இவர், இங்கிலாந்தின் ராணியாக 1953 யூன் 6 ம் திகதி முறைப்படி இவர் முடிசூட்டிக்கொண்டார்.
எலிசபெத் இங்கிலாந்துக்கு மட்டுமல்லாமல், கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் ஆட்சியாளராகவும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் விளங்குகிறார்.
எலிசபெத்தும் அவரது கணவரும் 1953 ல் 7 மாத கால சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என உலகம் முழுதும் 4 ஆயிரம் மைல்கள் பயணித்தனர்.
நூற்றுக்கும் மேலான மாநிலங்களின் தலைநகருக்கு எலிசபெத் சென்றுள்ளார். எல்லா நாடுகளிலும் அவருக்கு மக்கள் கூட்டம் திரண்டது. அவுஸ்திரேலியாவில் நான்கில் மூன்றுபகுதி மக்கள் முதல்முறையில் கூடினர்.
எலிசபெத் முதல்முறையாக, 1957 ல் சூயாஸ் கால்வாய் நெருக்கடியின்போது ’மக்கள் தொடர்புக்கு அப்பால்’ இருக்கிறார் என்று பத்திரிகை விமர்சனத்திற்கு ஆளானர்.
1964 ல் எலிசபத் மாண்ட்ரீலுக்கு வந்தபோது, பிரிவினைவாத அமைப்பினர் எலிசபெத்தை படுகொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாக தகவல் பரவியது. ஆனால், அது நடக்கவில்லை. கலகக்காரர்கள் கலைந்து சென்றனர். அங்கு எலிசபெத் பேசும்போது, ’தீவிரவாதத்தின் முகத்தில் அமைதியும் தைரியமும் தெரிகிறது’ என்றார்.
மேக்மில்லன் எலிசபெத் பற்றி எழுதுகையில், ’ராணி எலிசபெத் தேசத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கான மூலம். அவர் தனது கடமைகளை உணர்ந்தும் நேசித்தும் செயல்படுகிறார்.
ஆனால், ஒரு சினிமா நட்சத்திரம்போல பார்க்கப்படுகிறார். அவரும் இதயமும், வயிறும் உள்ள ஒரு மனிதரே’ என்றார். மேக்மில்லன் ராஜினாமாவிற்குப் பிறகு, அவருடைய அறிவுறுத்தலின்படி மக்களால் பிரதம மந்திரி தேர்வுசெய்யும் முறையை 1965 ல் ஏற்படுத்தினார்.
அவருடைய கால்நடை பயணமும் பொதுமக்களுடன் சந்திப்பும் முதன்முறையாக 1970 ல் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின்போது நடந்தது.
மாண்ட்ரீல் மற்றும் லண்டன் ஆகிய இரண்டு நாடுகளிலும் இரண்டுமுறை ஒலிம்பிக்கை தலைமை ஏற்று நடத்திய ஒரே தலைவர்.
ஒரு ராணியாக வெள்ளிவிழா, தங்கவிழா, வைரவிழா கண்டு வாழ்கிறார்.
உலகின் நீண்டகால முதல் பெண் ஆட்சியாளராகவும், தாய்லாந்தின் பூமிபால் அடுலியாதேஜ் அரசருக்கு அடுத்து, உலகின் இரண்டாவது நீண்டநாள் வாழும் ஆட்சியாளராகவும் ராணி எலிசபெத் ஆளும் உலகிற்கு அளவுகோல் ஆகியுள்ளார்.
-மருசரவணன்.
மூலக்கதை
