”வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு உள்ளதா?”: நிருபர்களின் கேள்விக்கு கனேடிய பிரதமர் அதிரடி பதில்

  NEWSONEWS
”வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு உள்ளதா?”: நிருபர்களின் கேள்விக்கு கனேடிய பிரதமர் அதிரடி பதில்

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபதிபர்கள் பலர் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வளர்ச்சிப் பணிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள Sudbury நகருக்கு நேற்று சென்றுள்ளார்.

அப்போது, ‘பனாமா நிறுவனங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் கனேடிய பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முதலீடுகள் உள்ளதா’? என பிரதமர் ஜஸ்டினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பிரதமர் பதிலளித்தபோது, ‘பனாமா பேப்பர்ஸில் ஜஸ்டின் ட்ரூடோ என்ற பெயர் இருக்காது.

என்னுடைய பெயர் மட்டுமின்றி என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயரும் அதில் இடம்பெற்று இருக்காது.

இதுமட்டுமில்லாமல், எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் எந்தவிதமான முதலீடுகளும் இல்லை’ என ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடைய முதலீடுகள் கனடா நாட்டிற்குள் எங்கு உள்ளது என்பது பற்றி என்னுடைய குடிமக்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக எந்தவித ரகசிய கணக்குகளையும் தொடங்கவில்லை என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தற்போது உலகளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கனடா நாட்டை சேர்ந்த பல கோடீஸ்வரர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை