‘மேக்-அப்’ செய்ய வரி பணத்தை செலவிட்ட பிரதமரின் மனைவி: சூட்டை கிளப்பும் புதிய சர்ச்சை (வீடியோ இணைப்பு)

  NEWSONEWS
‘மேக்அப்’ செய்ய வரி பணத்தை செலவிட்ட பிரதமரின் மனைவி: சூட்டை கிளப்பும் புதிய சர்ச்சை (வீடியோ இணைப்பு)

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் கலந்துக்கொள்ளும் அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், அவர் பொதுவாக இரண்டு விதமான உடுப்புகளை மட்டுமே விரும்பி அணிவார்.

ஒன்று, அரசு நிகழ்ச்சிகளுக்கு தேவையான ’கோட்-சூட்’ மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும்போது ‘நீல வண்ணத்தில் போலோ சட்டையை’ மட்டுமே அவர் எப்போதும் அணிவார்.

ஆனால், பிரதமரின் அலங்காரத்தை மிஞ்சும் வகையில் அவரது மனைவியான சமந்தா கமெரூன் தினம் ஒரு உடுப்பிலும், அலங்காரத்திலும் காட்சியளித்து அசத்துவார்.

இது தான் தற்போது சமந்தாவிற்கும், கமெரூனிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சமந்தா என்னென்ன உடுப்புகளை அணிய வேண்டும்? எப்படி தன்னை விதவிதமாக அலங்காரம் செய்துக்கொள்ள வேண்டும்? என்ற ‘மேக்-அப் டிப்ஸ்’ கொடுக்க Rosie Lyburn என்ற 28 வயதான மொடலை சமந்தா நியமித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் வருட்த்திற்கு சுமார் 53,000 பவுண்ட் ஊதியமாக இவர் பெற்று வருவது தான் இப்போது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா நிறுவனங்களில் பிரதமர் கமெரூனின் தந்தையான இயான் கமெரூன் ரகசியமாக வைத்திருந்த முதலீட்டில் தானும் பயன் பெற்றதாக பிரதமர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த சூழலில் தற்போது பிரதமரின் மனைவியும் வரிப் பணத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியுள்ளது இருவருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை