அமெரிக்காவின் சதி திட்டங்களின் ஒரு பகுதிதான் பனாமா பேப்பர்ஸ்: விளாடிமிர் புடின் (வீடியோ இணைப்பு)

  NEWSONEWS
அமெரிக்காவின் சதி திட்டங்களின் ஒரு பகுதிதான் பனாமா பேப்பர்ஸ்: விளாடிமிர் புடின் (வீடியோ இணைப்பு)

பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துக்களை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் நெருங்கிய நண்பரான செர்கெ ரோல்டுஜென் பெயரும் இடம் பெற்றுள்ளது

 இந்நிலையில் இந்த ஆவண கசிவு அமெரிக்காவின் சதி திட்டங்களின் ஒரு பகுதி என புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, ரோல்டுஜென் எந்த தவறும் செய்யவில்லை, வர்த்தம் மூலம் சம்பாதித்த பணத்தை விலையுயர்ந்த இசை கருவிகள் வாங்க மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார்.

அவற்றையும் பொது நிறுவனங்களுக்கு அவர் தானமாகமே வழங்கியுள்ளார். ரஷ்யாவின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை பார்த்து நம்முடைய எதிரிகள் கவலையடைந்துள்ளனர்.

எனவே ரஷ்யாவை உள்ளேயிருந்து பிளவு படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதி தான் இது. ரஷ்யாவின் அதிபருடைய நண்பர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என அவர்கள் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் ரோல்டுஜென் எந்த தப்பும் செய்யாதவர். அவரை போன்றவர்களை நண்பராக கொண்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை இந்த ஆவண கசிவு ஏற்படுத்தியுள்ளது. எனினும் ரஷ்ய அரசாங்க ஊடகமோ, அதிபரின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே இது பெரிதாக்கப்படுகின்றன தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை