இரண்டாக உடைந்த ஜேர்மனியை இணைத்த மாபெரும் அரசியல் தலைவர்: உடல்நலக்குறைவால் காலாமானார்
இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்ற பின்னர் ஏற்பட்ட விளைவுகளால் ஜேர்மனி நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக இரண்டாக உடைந்தது.
இதன் பின்னர் ஜேர்மன் சுவரும் எழுப்பப்பட்டது. இந்த நேரத்தில் மேற்கு ஜேர்மனி அரசாங்கத்தின் வெளியுறவு துறை அமைச்சராக Hans-Dietrich Genscher பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், ஜேர்மனி வரலாற்றில் அதிக ஆண்டுகள் வெளியுறவுத் துறை அமைச்சராக நீடித்தவரும் இவர் தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் பல கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஜேர்மனியை இணைக்கு முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இவரது முயற்சியின் பலனாக கடந்த 1990ம் ஆண்டு ஜேர்மன் சுவர் தகர்க்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி ஒன்றாக இணைந்தது.
வரலாற்று சிறப்பு பெற்ற இந்த அரசியல் தலைவர் 89 வயதை அடைந்ததால், அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜேர்மனியை இணைத்ததில் மாபெரும் பங்காற்றிய இவரது மறைவுக்கு அந்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.