சீரற்ற காலநிலையால் யாழில் இயற்கை அனர்த்தங்கள்

  PARIS TAMIL
சீரற்ற காலநிலையால் யாழில் இயற்கை அனர்த்தங்கள்

 யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் சில இடங்களில் மரங்கள் பாறி வீழ்ந்ததுடன் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. 

 
காற்றுடன் கூடிய மழை காரணமாக கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் உள்ள வீடொன்றில் பழைமை வாய்ந்த பாரிய வேம்பு மரம் ஒன்று திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது
 
இதனால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந் நிலையில் அச்சுவேலி தொண்டமனாறு பிரதான வீதியில் நின்றிருந்த பிரதான மின்கம்பங்கள் இரண்டு சரிந்து வீழந்துள்ளன. 
 
இதன் காரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை 751 மார்க்க வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்று வழியூடாக பயணம் செய்வதுடன், இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாக இன்று காலை மரம் முறிந்து வீழ்ந்ததில் சாவகச்சேரியை சேர்ந்த தொழிநுட்பவியாளர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

மூலக்கதை